×

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 300 உறைகிணறுகள் பாதிப்பு: குடிநீர் குழாய்களும் சேதம்

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள 59 கூட்டு குடிநீர் திட்டத்திற்கான சுமார் 300 உறைகிணறுகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் சுமார் 59 தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீரும் விநியோகிக்க படுகிறது இதற்காக பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன, இந்த உறைகிணறுகள் மூலம் நீரேற்றி தென் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீரானது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

உறைகிணறுகள் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உறைகிணறுகளில் இருந்த மின் மோட்டார்கள், மின் வயர்கள் மற்றும் அலுவலங்களில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. எல்லாவற்றிக்கும் மேலாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்திற்கு செல்லக்கூடிய குடிநீர் விநியோகத்தினுடைய குழாய்களும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன.

இப்பொழுது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வழிந்தோடியதை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணறுகளின் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 300 உறைகிணறுகள் ஒரேயொரு உறைகிணறு மட்டும் தற்போது நீர் விநியோகம் செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் மற்ற 299 உறைகிணறுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுகுடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 300 உறைகிணறுகள் பாதிப்பு: குடிநீர் குழாய்களும் சேதம் appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Nellai ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...